சிதம்பரம் : சிதம்பரம் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மாலைக்கட்டி தெரு பாரில் தகராறு செய்து பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் உள்ளிட்ட கும்பல் செந்தில்குமாரை பின்தொடர்ந்து விரட்டி வந்து வெட்டிக்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. கொலை தொடர்பாக கொத்தங்குடி தெரு மாரி மகன் பாஸ்கர் (39), அனந்தீஸ்வரவன்கோவில் தெரு, சிவராஜ் மகன் நடராஜ் (29), மந்தக்கரை பழமலை மகன் பட்டாணி செந்தில் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். பாஸ்கரின் கூட்டாளியான கணேசமூர்த்தி (26) சிதம்பரம் மாஜிஸ்திரேட் (2) கோர்ட்டில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்த செல்வத்தை நேற்று சிதம்பரம் புறவழிச்சாலை கண்ணங்குடி அருகே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Source:dinamalar
December 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- தொடரும் கனமழை! புதுவை குளிர்பிரதேசமாக மாறியது!
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
- தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
No comments:
Post a Comment