Islamic Widget

November 21, 2010

மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

கிள்ளை : மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது.கிள்ளை சுற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த 5 ஆயிரத் திற்கும் மேற் பட்ட மீனவர்கள் மற்றும் இருளர்கள்  கடலில் படகு மூலம் சென்று மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருக் குள் நுழைவதை தடுக்க கடற் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.இதில் கடலில் மீன் பிடிதொழில் செய்யும் மீனவர்கள் மற்றும் இரு ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் தேசிய அடை யாள அட்டை வழங்க 18 வயதை பூர்த்தியடைந்த மீனவர்களுக்கு  மாவட்ட மீன் வளத்துறை சார்பில் புகைப்படம் எடுக்கும் பணி முடசல்ஓடையில்  துவங்கியது. மீன்வளத் துறை  உதவி இயக்குனர் அகமதுல்லா கான், ஆய் வாளர் நாபிராஜ் உள் ளிட்ட அதிகாரிகள் முன் னிலையில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்கும் பணியை துவக்கி வைத்தார்.

Source:dinamalar

No comments:

Post a Comment