ரியோடிஜெனிரோ: பிரேசில் நாட்டைச் சேர்ந்த எலிசனி சில்வா உலகின் உயரமான இளம்பெண்ணாகி உள்ளார்.
14 வயதிலேயே இவர் 6 அடி 9 அங்குலத்துக்கு வளர்ந்து நிற்கிறார். வளர்ச்சி பருவம் முடியும் நிலையில் இவரது உயரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக உயரம் காரணமாக குனியாமல் அவரது வீட்டுக்குள்ளேயே நுழைய முடியவில்லை. இதனால் பலமுறை தலையில் இடித்துக் கொண்டுள்ளார்.
ஜியான்டிஸ்மோ என்ற நோய் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார். மாடலிங் துறையில் ஈடுபடுவதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment