Islamic Widget

November 21, 2010

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்

காட்டுமன்னார்கோவில் : தொடர் மழையால் வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதனால் ஏரிக்கு கீழணையில் பெறப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருந்தும் அரியலூர் மாவட்ட பகுதியில் பெய்துவரும் மழையால் செங்கால் ஓடை வழியாக 200 கன அடியும் மற்ற ஓடைகள் வழியாக 200 கன அடி என மொத்தம் 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியின் கொள்ளளவு 978.20 மில்லியன் கன அடி இருப்பு வைத்துக்கொண்டு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது பூதங்குடி பாசன வாய்க்கால் மூலம் 50 கன அடி, சென்னை குடிநீருக்கு 75 கன அடி அனுப்புவது போக வெள்ளாற்று வடிகால் மூலம் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment