பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு டிசம்பர் 6ஆம் தேதியன்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 2 நாட்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்படும். அதன்படி சனிக்கிழமை முதல் ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சந்தேகத்திற்கிடமாகத் திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் மெட்டெல் டிடெக்டர், ஸ்கேனர் கருவி ஆகியவற்றின் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
December 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- தொடரும் கனமழை! புதுவை குளிர்பிரதேசமாக மாறியது!
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
No comments:
Post a Comment