
கடந்த முறை விலையேற்றத்துக்குப் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால், சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டியது அவசியம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பி.எம்.பன்சால் கூறியுள்ளார்.
கடந்த முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது, சர்வதேச சந்தையில் பேரல் ஒன்று 81 முதல் 82 அமெரிக்க டாலர் வரை இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 87 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐஓசி நிறுவனத்திற்கு 1 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன.
Source: inneram
No comments:
Post a Comment