ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 80 மில்லியன் டாலர் மதிப்பில் பிரமாண்டமான சைனா மார்ட் வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு 250சீனத் தயாரிப்புப் பொருட்களை விற்கும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வீட்டு உபயோகப் பொருட்கள்,பர்னிச்சர்கள், மின்னணு, மின்சாதப் பொருட்கள், செராமிக்ஸ், அலங்காரப் பொருட்கள் என 12 வகையான பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்தத் திட்டத்தின் பங்குதாரரும்,துணைத் தலைவருமஅப்துல் அஜீஸ் அல் கிரிதிஸ் கூறுகையில், சவூதி, சீன கூட்டு முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்களே இதில் முழுக்கமுழுக்க ஈடுபடுவாரக்ள். அரபி மொழியை சரளமாக பேசக் கூடிய 500 பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.
சீனாவின் வெய் ஷிமிங் மற்றும் அலி கிரிதிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த சைனா மார்ட்டை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற பிரமாண்ட வணிக வளாகங்கள் ஜித்தாவிலும், தம்மாம்யிலும் தொடங்கப்படும் என்றும் அல் கிரிதிஸ் தெரிவித்துள்ளார்.
source: thatstamil
November 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை
- சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாரிகளை தாக்கிய இளம்பெண்
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
- உணவுப் பணவீக்கம் 17.05 சதவீதமாக உயர்ந்தது
- புவனகிரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
- பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- அயோத்தி தீர்ப்புக்கு ஜெ., வரவேற்பு
No comments:
Post a Comment