Islamic Widget

October 27, 2010

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம் - உச்ச நீதிமன்றம்!

குஜராத்தில் நடந்த இனக்கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி கொலை வழக்கைத் தவிர ஏனைய வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம் என இன்று கூறியது.


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவர வழக்குகளில் தீர்ப்பு வழங்க, கடந்த மே மாதம் 6 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் இன்று அந்தத் தடையை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், பி.சதாசிவம் மற்றும் அஃப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய அமர்வு நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை வழக்கு விசாரணையில் மட்டும் தீர்ப்பை வெளியிட தடை விதித்துள்ளது. மேலும், ஜாப்ரி கொலை தொடர்பான குல்பர்கா சொசைட்டி வழக்கை விசாரித்த நீதிபதியை இடமாற்றம் செய்தது குறித்து பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: inneram.com

No comments:

Post a Comment