Islamic Widget

October 27, 2010

இந்தோனிஷியாவில் சுனாமி தாக்குதல்

இந்தோனிஷியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியினால் கடலோர கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

திங்கள் கிழமை இரவு ஏற்பட்ட நில நடுக்கம் 7.7 ரிக்டர் அளவுக்கு இருந்தது.
இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


10 அடி உயரமாக வந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகளை அடித்துச் சென்றுள்ளது. இந்தோனிஷியாவில் உள்ள மெண்டாவி தீவு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனிஷியா பசிபிக் கடலில் எரிமலைகள் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
2004 ஆம் ஆண்டு இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 230000 பேர் இறந்துள்ளனர்.

Source: inneram.com

No comments:

Post a Comment