இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக ஏற்பட்டுள்ளன. சுமத்ரா தீவுக்கு சமீபமாக நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், இதற்கு அன்மையிலுள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
இந்தச் சுனாமித் தாக்கததினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 40க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. நேற்றிரவு கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில், 7.7 புள்ளித் தாக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு, அருகிருந்த கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தரை மட்டமாகியுள்ளன. நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதும் பல மக்கள் முன் கூட்டியே அங்கிருந்து வெளியேறிவிட்டதால், அங்கு பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க மத்திய ஜாவா நகருக்குச் சமீபமாக, மேர்வி மலை புகை கக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்புக் கருதி அப் பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
நேற்று முன் தினம் கடும் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால், ஜகர்த்தா நகரின் முக்கிய தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதன் காரணமாகப் போக்குவரத்துக்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது.
Source:tamilmedia
No comments:
Post a Comment