கடலூர் : கடலூர் நகராட்சி பஸ் நிலையத்தில் தேங்கியுள்ள அசுத்த நீரால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த பழைய வணிக வளாகக் கட்டடம் இடிக்கப்பட்டது. காலியாக கிடக்கும் இந்த இடத் தில் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால் அந்த இடத்தின் அருகே பூங்கா வைத்து பராமரிக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பட்ட இடம் பள் ளமான பகுதியாக இருப்பதாலும் மழை நீர் வெளியேற முடியாமல் உள்ளதாலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கழிவுகள், பாலிதீன் பைகள், பூக்கள் குப்பைகள் என சேர்ந்துள் ளன. அத்துடன் இரவு நேரங்களில் கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதுடன் கொசு அதிகரித்துள்ளது. பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவற்றில் அவதிப்படும் மக்களுக்கு இந்த அசுத்தமான குளத் தால் மேலும் பல தொற்றுநோய்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
Source: Dinamalar
No comments:
Post a Comment