கடலூர் : கடலூர் பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் இருவரிடம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் செல்வி என்பவர் அடகுக் கடையில் வைத்திருந்த நகைகளை மீட்க நேற்று மாலை திருப்பாதிரிப்புலியூர் வந்தார். பழைய நகையை நகைக்கடையில் விற்று அதில் கிடைத்த பணத்தில் நகையை மீட்டு முதுநகர் செல்ல பஸ் ஏற கடலூர் பஸ் நிலையம் வந்தார். குறிஞ்சிப்பாடி டவுன் பஸ்சில் ஏறி உட்கார்ந்து பார்த்த போது தனது பையில் வைத்திருந்த நகை மற்றும் 2,000 ரூபாய் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
அதேப்போல புதுச்சேரி வீராம்பட்டி னம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீனவர் வீரமணி புதிதாக படகு வாங்க மனைவி மற்றும் உறவினர் நகையை அடகு வைக்க பரங்கிப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென் றார். அங்குள்ள இந்தியன் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்து பணத்தை கட்டை பையில் வைத்துக் கொண்டு பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கி அரசு பஸ்சில் வந்தார்.
முதுநகர் மணி கூண்டு வந்தவுடன் சிலர் பஸ்சில் இருந்து இறங்கினர். அப்போது நகர்ந்து உட்காரும்போது பையில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடலூர் அண்ணா பாலம் சிக்னல் அருகே இறங்கும்போது பையில் இருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு திடுக்கிட்டார். பதட்டமடைந்த வீரமணி பஸ்சை விட்டு இறங்கி பஸ்சை நிறுத்துமாறு கூறிவிட்டு அருகில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் பஸ்சை சோதனையிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் போலீஸ்காரர் அதை கண்டு கொள்ளாமல் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்யுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே பஸ்சில் இருந்து பின்புற வழியாக சிலர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். வேறு வழியின்றி வீரமணி திருப் பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்விரு புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவங்களில் நகை, பணத்தை பறி கொடுத்த செல்வி, வீரமணி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி போலீஸ் நிலையத்தில் அழுது புரண்டனர். சீதாலட் சுமி மயக்கமடைந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Source: Dinamalar
No comments:
Post a Comment