Islamic Widget

October 07, 2010

ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவெறி அமைப்பு: ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவெறி அமைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், தடை செய்யப்பட்டுள்ள "சிமி' (இஸ்லாமிய மாணவர் தீவிரவாத இயக்கம்)-க்கும் வித்தியாசம் ஏதுமில்லை. இரண்டும் ஒரே மாதிரியானவைதான் என்றும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவரது பேட்டி விவரம்:

சிமி தடை செய்யப்பட்ட அமைப்பு அதனுடன் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்?
ஆர்.எஸ்.எஸ்., சிமி இரண்டு அமைப்புகளுமே அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவை. சிமி தடை செய்யப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படவில்லை அவ்வளவுதான் வித்தியாசம். மதவெறி உள்ளவர்களுக்கு இளைஞர் காங்கிரஸில் ஒருபோதும் இடமில்லை.

அயோத்தி தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பாபர் மசூதி இடிக்கப்பட்டதையோ அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களை அயோத்தி தீர்ப்பு மன்னித்துவிடவில்லை. பாபர் மசூதியை இடித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். நிலம் மூன்று தரப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழி உள்ளது.நான் நாள்தோறும் இளைஞர்கள் பலரைச் சந்தித்து வருகிறேன். யாரும் அயோத்தி பிரச்னையைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கவலை எல்லாம் கல்வி, வேலை வாய்ப்பு என்பதில்தான் உள்ளது. நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள கல்வி முறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறை மாற்றியமைக்கப்பட்டால் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியா பெரிய அளவில் வளர்ச்சியடையும்.

நீங்கள் பிரதமராவீர்களா?

பிரதமர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், விருப்பத்தில் ஒரு நாளும் நான் செயல்படவில்லை. நான் பிரதமராவேன் என்பது உங்கள் எண்ணம், விருப்பமாக இருக்கலாம். நான் ஒருநாளும் அவ்வாறு நினைத்துப் பணிபுரியவில்லை.

பிரதமராக வேண்டும் என்பது உங்கள் விதியாக இருந்தால்?

எனக்கு தலையெழுத்து, விதி ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை.
பிரதமர் மன்மோகன் சிங் என்னைவிட திறமையானவர். அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இது எனது கருத்துமட்டுமல்ல. பல்வேறு தலைவர்களின் கருத்தும்கூட. இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரûஸ கவனித்துக் கொள்வதே எனது பணி. நாட்டுக்காக கடுமையாக உழைத்தால் பதவிகள் தானே தேடி வரும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன்.

இளைஞர் ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளதா?

ஊகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும். எதுவும் நடக்கலாம்.
நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள். இருப்பினும் அரசியலில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த 70 சதவீதம் பேரை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காவே நான் பாடுபட்டு வருகிறேன். இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சாதாரணமானவர்கள் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அங்கு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை சில ஆயிரங்களிலிருந்து சில லட்சங்களாக உயர்ந்துள்ளது.

கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்களே?

பல்வேறு விஷயங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். நாம் சொல்லும் வார்த்தைகள் கட்சிக்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மனதில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி போன்ற பெரிய கட்சியில் ஒரு குறிப்பிட்ட அளவு வரை விவாதங்களை அனுமதிக்கலாம். ஆனால் நாம் தெரிவிக்கும் கருத்துகள் கட்சி கொள்கைகளுக்கு மாறாக இருக்கக் கூடாது. இருப்பினும் எனது பொறுப்பு இளைஞர் காங்கிரúஸôடு நின்றுவிடுகிறது. அது தொடர்பான விஷயங்களில் மட்டுமே நான் கேள்வி கேட்க முடியும் என்றார் ராகுல்.
"மத்தியப் பிரதேசத்துக்கு வரும் ராகுல் காந்தி மாநில அரசு விருந்தினராக கருதப்படுவார்' என்று மாநில முதல்வர் சிவராஜ் செüகான் கூறியது பற்றி கருத்துத் தெரிவித்த ராகுல், மாநில அரசு என்னை விருந்தினராகக் கருதினாலும் சரி, இல்லை சாமானியனாக எடுத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொருத்தவரை பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்றார் அவர்.
 
 
Source: tinamani

No comments:

Post a Comment