சிதம்பரம் : சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அண்ணாமலை செட்டியார் பெயரை சூட்ட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கண்ணதாசன், முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் நகரின் கிழக்குப் பகுதியில் ரயில்வே நிலையம் அருகில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. கடலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 1920ம் ஆண்டு அண்ணாமலை செட்டியார் மீனாட் சிக் கல்லூரியை துவக்கினார். 1929ம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் சிதம்பரம் சுற்றுப் பகுதியில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டது. தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
எனவே சிதம்பரம் நகருக்கு பெயர் சேர்த்த அண் ணாமலை செட்டியாருக்கு புகழாரம் சூட்டும் வகையில் சிதம்பரம் ரயில்வே மேம்பாலத் திற்கு அவரது பெயரை சூட்ட மழைகால சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
Source: Dinamalar
No comments:
Post a Comment