கடலூர்: கடலூர் புதுநகர் பகுதியில் பெண்கள் மற்றும் மாணவிகளை கிண்டல் செய்த ரோமியோக்களைப் பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கடலூரில் கடந்த சில நாட்களாக பஸ் ஸ்டாண்ட், பூங்கா, மைதானம் என குறிப்பிட்ட சில இடங்களில் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவிகளை இளைஞர் கள் கிண்டல் செய்வது தொடர்ந்து வருகிறது. மேலும் நகரில் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சாதாரண உடையில் குறிப் பிட்ட சில இடங்களில் ரகசியமாக...
கண்காணித்தனர். இதில் பெண்கள் மற்றும் மாணவிகளை கிண்டல் செய்த இளைஞர்களை பிடித்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தனர். அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் இருந்தது தெரியவந்தது. உடன் அவர்களின் பெற் றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக் கப்பட்டனர். பின்னர் மாணவர்களிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். நேற்று போலீசாரிடம் பிடிபட்ட 18 பேரில் இரண்டு பேர் இந்த பிரச் னைகளில் சம்பந்தபடாதவர்கள் எனவும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இரண்டு ஜோடிகள் வீட் டிற்கு தெரியாமல் பூங்காவிற்கு வந்து போலீசிடம் சிக்கியவர்கள் எனவும் தெரியவந்தது. கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்கள் மற்றும் சிபாரிசு செய்ய என 50க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Source: Dinamalar
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment