சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாணவி, விடுதி அறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நவுசத் அலி மகள் நூர்நிகார்(20) மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் பிரிவில்
படித்துவந்தார். பல்கலைக்கழக வளாக விடுதியில் எண்.203 அறையில் நான்கு மாணவியருடன் தங்கியிருந்தார். நேற்று காலை சக மாணவியர் வகுப்புக்குச் சென்றனர். உடல் நிலை சரியில்லை எனக் கூறி மாணவி நூர்நிகார் வகுப்புக்குச் செல்லாமல் சோர்வாக அமர்ந்திருந்தார். இந்நிலையில், வகுப்புக்குச் சென்ற மாணவி ஒருவர் அறைக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. தட்டிப் பார்த்தும் திறக்காததால் வார்டனிடம் தகவல் தெரிவித்தார். கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் நூர்நிகார் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அவரது கால் பகுதியில், "சாரி' என்றும், கடிதம் ஒன்றில், "அப்பா, அம்மாவுக்கு சாரி' என்றும் எழுதி வைத்திருந்தார். கல்லூரியில் நேற்று முன்தினம் தேர்வுக்கான ரிசல்ட் ஒட்டியுள்ளனர். நூர்நிகார் இரண்டு பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இந்த வேதனையில் மாணவி நூர்நிகார் தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த அண்ணாமலைநகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
Source: Dinamalar
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment