குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த தீர்த் என்பவர் ஆமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். இந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதே காவி நிறம்.
இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் பற்றிய மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் பேச்சு இந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற 6-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்தியாவில் நடந்த மாலேகான், அஜ்மீர், கோவா, நாசிக் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்து விட்டது அதை தானே சிதம்பரம் சொன்னார்.. அவர் சொன்னது தவறு என்றால் சிபிஐ கண்டு பிடித்தது தவறா? ஒவ்வொரு குண்டு வெடித்ததும் சில நிமிடங்களில் முஸ்லிம்கள் மீது பழி போடுபவர்கள்.. இப்போதுதான் உண்மையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. முன்பு இதை சொன்ன கர்கரே என்ன ஆனார். உண்மை சிலநேரங்களில் கசக்கத்தான் செய்யும். காவி பயங்கரவாதிகளுக்கு தேசபக்தி பற்றி பேச அருகதை இல்லை..
ReplyDelete