Islamic Widget

August 05, 2010

கடலூரில் சுரங்கப்பாதை நிச்சயம்: கலெக்டர் சீத்தாராமன் வாக்குறுதி

கடலூர்:கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை நிச்சயம் அமைக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.மாவட்ட அளவிலான குடும்ப நலம் உலக மக்கள் தொகை கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. எம். எல்.ஏ., அய்யப்பன், டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் வரவேற்றார்.கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:கடலூர் மாவட்டத்தில் இறப்பு சதவீதம் அதிகளவில் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக் கள் தொகை பெருக்கத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை நிச்சயம் வரும். தமிழக அரசு ஜூலை 31ம் தேதி இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் 7.3 கோடி ரூபாய் சுரங்கப் பாதைக்கு நிதி ஒதுக்கப் பட் டுள்ளது. சுரங்கப்பாதை 2.5 மீட்டர் உயரத்தில் 320 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது. ரயில்வேத் துறை செப்டம்பரில் டெண்டர் விடுவதற்கு உறுதியளித்துள்ளது. இதனால் நிச்சயம் இத்திட்டம் நிறைவேறும். மாவட்டத்தில் வறுமைக் கோட் டிற்கு கீழ் அதிகம் உள்ளனர். "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 758 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 1 லட்சத்து 36 ஆயிரத்து 414 வீடுகள் தகுதியுடையவைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 ஆயிரத்து 501 வீடுகள் பரிசீலனையில் உள்ளன. இந்த புள்ளி விபரங்கள் கம்ப்யூட்டரில் பதியும் பணி துரிதமாக நடக்கிறது. இதுவரை 77 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில் சேர்மன் தங்கராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, திட்ட அலுவலர் ஹபிசா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


source: dinamalar

No comments:

Post a Comment