புவனகிரி:புவனகிரியில் மின் கம்பியில் மாட்டிய பட்டத்தை இழுக்கும் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேல்புவனகிரி ஆட்டு தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரை. இவர் சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வமணி (13). இவர் புவனகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.செல்வமணி நேற்று மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த பின்னர், மேல்புவனகிரி மயானம் அருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் அந்த வழியாகச் செல்லும் மின் கம்பியில் சிக்கிக் கொண்டது. உடன் செல்வமணி பட்டத்தை எடுக்க பட்டத்தில் நூலை பிடித்து இழுத்தார். எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து செல்வமணி மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி செல்வமணி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த பு.முட்லூர் உதவி செயற்பொறியாளர் குமார், புவனகிரி கிளை அலுவலக உதவி பொறியாளர் சாமிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் செல்வமணியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- Quran Kareem TV Makkah
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பயணியிடம் ரூ.1.76 லட்சம் அபேஸ் :சிதம்பரம் பஸ் நிலையத்தில் துணிகரம்
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
- பரங்கிப்பேட்டை: முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- இறப்புச் செய்தி
- சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது
No comments:
Post a Comment