Islamic Widget

August 04, 2010

ரயில் நிலைய கட்டடம் இம்மாத இறுதியில் திறக்கப்படுமா?

சிதம்பரம்:சிதம்பரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஜவ் வென இழுத்து வந்த ரயில் நிலைய கட்டடம் ஒரு வழியாக கட்டி முடிக் கப்பட்டு இம்மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் முக்கிய ரயில் நிலையம் சிதம்பரம். சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் ஆகியன இருப்பதால் உலகம் முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரம் வருகின்றனர்.அதேப்போன்று பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து வருகின்றனர். இவர்கள் ரயில் மூலமே அதிகமாக வருவதால் சிதம்பரம் ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு தகுதி வாய்ந்த அளவிற்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் விஸ்தீரமான கட் டடம், பயணிகள் ஓய்வு அறை, தங்கும் வசதி என எதுவும் இல்லாமல் இருந்தது.
அதனையொட்டி கடந்த 2003ம் ஆண்டு சிதம் பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விஸ்தீரமான ரயில் நிலைய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட் டது. அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டினார். ஆனால் காண்ட் ராக்ட் எடுத்தவர்கள் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி பணியை செய்யாமல் பாதியிலேயே ஓடினர். அதனைத்தொடர்ந்து காண்ட் ராக்டர்கள் மூன்று பேர் மாற்றப்பட்ட போதும் பணிமுடிந்த பாடில்லை.இந்நிலையில் அகல ரயில்பாதை பணி முடிந்து ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ரயில் நிலைய கட்டட பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதனையடுத்து ஆர்.வி.என்.எல்., ஏற்று முடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டு பணியை துவக்கியது.இதனைத் தொடர்ந்து புதிய எஸ்டிமேட் போடப் பட்டு ஒரு கோடி ரூபாய்க் கும் மேல் செலவு செய் யப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் இடம், தங்கும் அறை, கடைகள், டிக்கெட் கவுண்டர் என அனைத்தும் தயாராகி விட்டது. புதிய மாடல் விளக்குகள், தரையில் டைல்ஸ் ஆகியன பதிக் கப்பட்டு கட்டடம் "பளீச்'சென காணப்படுகிறது.வெளித்தோற்றம் முழுமையடையவில்லை என் றாலும், உட்புறம் அத்தனை பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. கடந்த மாதமே திறப்பு விழா காண இருந்த இக்கட்டடம் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.


நன்றி தினமலர்

No comments:

Post a Comment