Islamic Widget

March 08, 2012

சவூதி: சம்பள விவகாரத்தைக் கண்காணிக்கும் குழு அமைப்பு

சவூதி: சம்பள விவகாரத்தைக் கண்காணிக்கும் குழு அமைப்புசவூதி அரேபியாவிலுள்ள நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க ஊழியர்நலத்துறை அமைச்சகம் தேசிய ஊழியர் குழுமத்தை (National Labour Committee) அமைத்திருந்தது.  இக்குழுமம் வரைந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மேற்பார்வையும் மீள்பார்வையும் செய்யும் இறுதிக்கட்டத்தில் அமைச்சக அதிகாரிகள் உள்ளதாக அரபு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய ஊழியர் குழுமத்தின் தலைவர் நிதால் ரித்வான் இச்செய்தியைத் தெரிவித்துள்ளார். ரித்வான் மேலும் தெரிவிக்கையில், "இக்குழுமத்தின் வரைவுகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள ஊழியர்நலத்துறை நிபுணர்கள் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுக்கப்படும் " என்றார்.
"திவாலாகிப்போகாத வரை, எந்த நிறுவனமும் தமது ஊழியர்களுக்கான சம்பளத்தைத் தாமதப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க இயலாது" என்று குறிப்பிட்ட நிதால் ரித்வான், "இது தொடர்பாக ஊழியர் நலத்துறை அமைச்சகம் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அமைச்சகத்தின் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும்  நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்" என்றார்.
"தத்தம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிடாத எவரும் பொதுமக்களின் பணத்தைச் சூறையாடும் திருடர்கள் என்றே கருதப்படத்தக்கவர்கள்" என்று கூறிய  ரித்வான், தமது அமைப்பின் விதிமுறைகளை சர்வதேச ஊழியர் அமைப்பின் (International Labour Organization -ILO) விதிகளைப் பின்பற்றியே அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment