குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பதால் திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக திருச்சி எம்.பி.குமார் தலைமையில், ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூடும் ஆலோசனைக்குழு, விரிவாக்கப்பணிகளை விரைவாக்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைக்கூட்டம், ஆலோசனைக்குழு தலைவர் திருச்சி எம்.பி.குமார் தலைமையில் நடந்தது.
இதுகுறித்து ஆலோசனைக்குழுத் தலைவர் எம்.பிகுமார் கூறியதாவது, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 510 ஏக்கர் தேவைப்படுகிறது.
மொத்தமுள்ள 510 ஏக்கரில், 188 ஏக்கர் தரிசுநிலம், 116 ஏக்கர் விளைநிலம், 40 ஏக்கர் புறம்போக்கு நிலம். நிலங்களை கையகப்படுத்த, திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுள்ளோம்.
நிலங்களை கையகப்படுத்தி தருவது அவர்களின் வேலை. விமான நிலையம் அருகே உள்ள 164 ஏக்கர் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை பெற ராணுவ மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இடத்தை தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நிலத்தை கையப்படுத்த திருச்சி டி.ஆர்.ஓ வேளாண் இணை இயக்குனர், பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள், விமான நிலைய இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் பணியை தொடங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment