Islamic Widget

January 26, 2012

ஜமாஅத் தேர்தல்: விறுவிறு மாற்றம்


வாக்குப்பதிவு பிப். 12-ம் தேதி, ஞாயிறு
வாக்குப்பதிவு  இடம் மாற்றம்!
துண்டு பிரசுரத்திற்கு அனுமதி!! 
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி 16ந் தேதி வியாழக்கிழமை நடைபெறும்  என்று நேற்று முன் தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். விடுமுறை தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசு - தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும், வெளிநாடு வாழ் சகோதரர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் உள்ளுர் பிரமுகர்களும் வேட்பாளராக களம் இறங்க உள்ள டாக்டர் நூர் முஹம்மதும் இதே கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்ததாக தெரிகிறது. இந்த கோரிக்கையினை தொடர்ந்து, முன்னர் வெளியிட்ட அறிவிப்பினை ரத்து செய்து, ஜமாஅத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் பிப்ரவரி 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
ஓரியண்டல் பள்ளியில் வாக்குப்பதிவு
மீராப்பள்ளி தெருவில் அமைந்துள்ள ஓரியண்டல் பள்ளியில் பிப்ரவரி 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு தொடங்கும், வாக்குப்பதிவு அன்று மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 01ந்  தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனுவை திரும்ப பெற பிப்ரவரி 02ந் தேதி இறுதி நாளாகும்.
வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவடைந்ததும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
துண்டு பிரசுரத்திற்கு அனுமதி
பொதுக்கூட்டம், சுவரொட்டிகள், ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் தனி நபர் விமர்சன துண்டு பிரசுரங்கள் ஆகியவைகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே வேட்பாளர்கள், தங்கள் பெயர் -சின்னம் ஆகியவற்றினை குறிப்பிட்டு தனி நபர் விமர்சனம் இன்றி துண்டு பிரசுரம் வெளியிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
தேர்தல் பிரசாரக் காலம் 9 தினங்களாக குறைக்கப்பட்டிருப்பதால், தனி நபர் விமர்சனம் இல்லாத துண்டு பிரசுரங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது
18 வயது நிரம்பிய (29-01-1994 ஐ தகுதி நாளாக கொண்டு அந்நாளுக்கு முன்னர் பிறந்த)  பரங்கிப்பேட்டை முஸ்லிம் ஆண்கள் அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்க ததியுள்ளவர்கள்.
வாக்களர் சேர்க்கை, தேர்தல் தேதி உள்ளிட்டவைகள் குறித்து மக்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:mypno

No comments:

Post a Comment