பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கை போரையும், அராஜகத்தையும் உருவாக்கும் என பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது: ராணுவ நடவடிக்கையை தவிர்க்க எங்களால் இயன்ற அளவு முயற்சிப்போம். ராணுவ நடவடிக்கை என்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மாறாக, பிரச்சனையை மேலும் சீர்குலைக்கும்.
வளைகுடா பகுதியை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் போரை நோக்கி தள்ளும் என்று சர்கோஸி கூறினார்.
ஈரான் மீது தாக்குதல் நடந்தால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீதமும் இவ்வழி மூலமாகத்தான் நடக்கிறது. இதனை கவனத்தில் கொண்டுதான் சர்கோஸி ஈரான் மீதான ராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என கருதப்படுகிறது.
ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பொருளாதார தடையை வலுப்படுத்த வேண்டும் என சர்கோஸி கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment