Islamic Widget

December 13, 2011

"ரசாயன ஆலைகள் மீது நடவடிக்கை தேவை'

கடலூர் சிப்காட்டில் விதி மீறி செயல்படும் ரசாயன ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிப்காட் பகுதி மாநாடு கடலூர் சிப்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

சிப்காட் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுப்பதற்கான உபகரணங்களை ஆலை நிர்வாகத்தினர் நிறுவ மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரத் தன்மையுள்ள தொழில்களில் கூட ஒப்பந்தம், பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு பி.எப்., ஈ.எஸ்.ஐ. போனஸ் போன்ற சட்டப்பூர்வ சலுகைகள் மறுக்கப்படுகிறது.

இவர்களுக்கு அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.என். ராமராஜ்யம் கொடி ஏற்றினார். எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். கே.வரதராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.மாதவன் மாநாட்டை தொடங்கி வைத்தார். சிப்காட் பகுதி செயலர் ஆர்.ஆளவந்தார் அறிக்கை சமர்ப்பித்தார். செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன் நிறைவுரையாற்றினார்.

இதில் 9 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஆர்.ஆளவந்தார் மீண்டும் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment