பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேருராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு அளித்த டாக்டர் நூர் முஹமது இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அவர் மனுதாக்கல் செய்ய வரவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைந்துவிட்டதினால்,
அவர் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக போட்டியிடவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முஹமது பாரூக்கும் மனுதாக்கல் செய்யவில்லை
No comments:
Post a Comment