Islamic Widget

June 06, 2011

பரங்கிப்பேட்டை : பு.முட்லூரில் ரூ.8.97 லட்சத்தில் குடிநீர் வசதி செய்து தர முடிவு

பரங்கிப்பேட்டை : பு.முட்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8.97 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதி செய்துதர ஒன்றியகுழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு அவசரக் கூட்டம் மன்ற வளாகத்தில் நடந்தது. சேர்மன் முத்துபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் துரைசாமி, சந்திரகாசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பின்தங்கிய பகுதிக்கான மானியநிதி திட்டத்தில் பு.முட்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு கலைக்கல்லூரி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8.97 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் முடிவண்ணன், மேலாளர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment