Islamic Widget

April 28, 2011

கோடை கால திருட்டை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்க போலீஸ் முடிவு

கோடை கால திருட்டை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காட்டுமன்னார்கோவிலில் போலீசார் துண்டு பிரசுரம் அச்சடிக்கத் துவங்கி விட்டனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையடுத்து பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர், வெளியூர் பயணம், சுற்றுலா என உல்லாச பயணம் செல்வது வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காண்பிக்கும் திருடர்கள் தங்களது தொழிலை போட்டு காட்டத் துவங்குவார்கள். அவர்களின் இலக்கு ஆட்கள் இல்லாத வீடு, வெயில் காலமாக இருப்பதால் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடு, மதிய நேரத்தில் காற்று வாங்க மேல் மாடிக்குச் செல்பவர்களின் கீழ் தளம், வயதானவர்களை மட்டும் வீட்டில் விட்டு விட்டு ஊருக்கு செல்பவர்களின் வீடுகள் என பட்டியலிட்டு திருடுவதும் உண்டு. வழக்கம் போல் போலீசார் ஒரு திருட்டை கண்டுபிடிப்பதற்குள் அதே பகுதியில் அடுத்தடுத்து திருட்டுகள் நடந்து கொண்டே இருக்கும். இதனால் கோடை காலம் துவங்கி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு நடந்து விட்டால் பெரும் தலைவலியாக போலீசார் கருதுகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் விடுமுறை காலத்தில் ஏற்படும் திருட்டை தவிர்க்க வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு அறிவுரை அளிக்கும் வகையில் துண்டு பிரசுரம் அடிக்க தயாராகியுள்ளனர். அதில் வீட்டை பூட்டி விட்டு செல்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வீட்டில் அதிக நகை, பணம் பொருட்களை வைக்காமல் பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சந்தேகப்படும்படியான ஆட்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். நகர் பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீடுகளில் நட்பாய் இருப்பது உள்ளிட்ட பல்வேறு அட்வைஸ் அதில் அடங்கியுள்ளது. எந்த புகாரானாலும் உடனடியாக வழக்குப் பதிய வேண்டும் என விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் உத்தரவால் கலங்கிப் போயிருக்கும் போலீசார் திருட்டு பயத்தால் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment