Islamic Widget

March 28, 2011

துபாயில் நடந்த கொலை வழக்கு; 8 இந்தியர்கள் மரண தண்டனை ரத்து; நஷ்டஈடு கொடுத்ததால் தப்பினர்

புதுடெல்லி, மார்ச். 28- ஐக்கிய அரபு நாடான ஷார்ஜாவில் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானை சேர்ந்த மும்தாஸ்யூசுப் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவருடன் வேலை பார்த்த இந்தியர்களும், பாகிஸ்தான் காரர்களும் சேர்ந்து அவரை கொலை செய்தனர். இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 10 பேருக்கும் கோர்ட்டு மரண தண்டனை விதித்து அரபு நாட்டு சட்டங்கள் படி கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருக்கு குற்றவாளிகள் தரப்பில் இருந்து உரிய நஷ்டஈடு வழங்கினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதற்கு ரத்த பணம்” என்று பெயர். 10 பேருக்கும் ரத்த பணம் கட்ட துபாயில் உள்ள இந்திய ஓட்டல் அதிபர் எஸ்.பி.சிங் ஓபராய் முன்வந்தார். இதை கொலை செய்யப்பட்டவரின் தந்தையும் ஏற்றுக் கொள் வதாக கோர்ட்டில் உறுதி அளித்தார். இதையடுத்து 8 இந்தி யர்கள், 2 பாகிஸ்தானியர் மரண தண்டனையை ரத்து செய்து நீதிபதி உத்தர விட்டார். மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அந்த நாட்டு சட்டப்படி 3 ஆண்டுகள் அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். தற்போது 21 மாதங்கள் ஜெயிலில் இருந்துள்ளனர். 3 வருடம் முடிந்ததும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment