ஜித்தா,ஜன.2:மக்கா மாகாணத்திற்குட்பட்ட அல்லித் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்கள் நான்கு பேர் இறந்துவிட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய நான்குபேரும் காணாமல் போயினர். இவர்களின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.ராணுவத்தினரும், அப்பகுதி மக்களும் காணாமல் போனவர்களை தேடினர். அல்ரவ்தாவில் இரண்டுபேரின் உடல்கள் கிடைத்தன. இதர இருவரின் உடல்கள் வாதி அல் அயாரிற்கு சமீபத்திலிருந்து கிடைத்ததாக அல்லித் பகுதியைச் சார்ந்த ஸஈத் அல்மெஹரபி தெரிவிக்கிறார்.வியாழக்கிழமை கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து அல்லித் பகுதியில் அணைக்கட்டிலிருந்து வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி நிலைமை மோசமானது என அவர் தெரிவிக்கிறார்.
வெள்ளப்பெருக்கில் சிக்கிய பங்களாதேஷைச் சார்ந்தவரை வெள்ளிக்கிழமை காப்பாற்றியதாக அவர் தெரிவிக்கிறார். ஜித்தாவில் பல சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி cwo


No comments:
Post a Comment