பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு பூவாலை வழியாக தனியார் பஸ் சென்று வருகிறது.
திடீரென கடந்த நான்கு நாட்களாக பஸ் வரவில்லை. அரசு பஸ் மட்டும் அந்த வழியாக சென்று வருதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கட்டட தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை தனியார் பஸ் புதுச்சத்திரத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்கு பூவாலைக்கு வந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்சை வழிமறித்து சிறை பிடித்தனர். தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பஸ் தினமும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பஸ் விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Source:dinamalar
December 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் - கருணாநிதி உத்தரவு
- அமெரிக்காவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் ஆர்பாட்டம்
- பரங்கிப்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- காட்டுமன்னார்கோவிலில் பா.ஜ.க.வினர் அமைத்த நீர், மோர் பந்தல் அகற்றம்
- என்ன மலையாளிக்கு மூளை இல்லையா??????
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- இறப்புச் செய்தி
- துபாய், அபிதாபியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக பெண் மோசடி:
No comments:
Post a Comment