பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில்
சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, மற்றும் முடசல் ஓடை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய தேசிய கடல் தகவல்கள் அளிக்கக் கூடிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகை மூலம் கிடைக்ககூடிய தகவல் குறித்து நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு டாடா சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அலுவலர் இளங்கோவன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்டம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன், வீரராஜ், கிராம தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.
Source: Dinamalar
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வுகடலூரில் நாளை நடக்கிறது
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
No comments:
Post a Comment