சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கத்தில் சேருவதற்கு, வரும் நவம் பர் 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட் டுள்ளதாக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் அனைத்து பாடப்பிரிவுகளும், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்கு முழுமையான தகுதி நிர்ணயம் செய்யும்
தொலை நிலைக் கல்வி குழுமம், டில்லி மற்றும் பல்கலைக் கழக மானிய குழு அங்கீகாரத்துடன் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகத்தின் நேரடி படிப்பு மையங்கள் மற்றும் தகவல் மையங்கள் மூலம் தற்போது 4.5 லட்சத்திற்கும் அதிமானோர் சேர்ந்து, தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டுள்ளனர். இந்தக் கல்வி ஆண்டிலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பி.ஏ., - பி.எஸ்சி., - பி.லிட்., - பி.பி.ஏ., - பி.எஸ்சி. கம்ப்யூட்டர், - எம்.ஏ.,- எம்.எஸ்சி., - எம்.எஸ்.டபிள்யூ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உளவியல், மருத்துவ அறிவியல், மருந்தாளுகை, யோகா, பொறியியல் உள்ளிட்ட 500க்கும் அதிகமான பல்வேறு உடனடி வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள மருத்துவம், கம்ப் யூட்டர், மேலாண்மை, நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறந்த நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல பாடப் பிரிவுகளில் பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை, முன்னாள் மாணவர்கள் தொலை தூரக்கல்வியில் சேர சலுகைக் கட்டணம், தற்போதைய மாணவர்கள் கூடுதல் படிப்பில் சேர கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உள்ளிட்ட, மாணவர்களை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களும் அமலில் உள்ளன. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் சேருவதற்கான கால நீட்டிப்பு நவம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்."
Source: Dinamalar
October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- இறப்புச் செய்தி
No comments:
Post a Comment