கல்வி வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் , பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை (பத்தாம் வகுப்பிற்கு பிறகு) கல்வி பயிலும் மாணவிகள் மேல்நிலையில் (+1 மற்றும் +2) ஆங்கில வழி (English Medium) பயிற்றுவிப்பு இல்லாததின் காரணமாக, தொடர்ந்து கல்வி பயில்வதில் மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டி அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை அரசு ஏற்க முன்வராததின் காரணமாக இரு ஆசிரியர்களுக்கான ஊதியத்தினையும் வழங்க இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முன்வந்தது அதனடிப்படையில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) கடந்த மாதம் அனுமதி வழங்கி இருக்கிறார். இத்தகவலை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நன்றி mypno
September 05, 2010
ஆங்கில வழிக்கல்வி - இரு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகிறது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!

No comments:
Post a Comment