Islamic Widget

August 30, 2010

தாய்ப்பால் தராத பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
வாஷிங்டன்: தங்களுடைய அழகு பாதிக்கப்படும் என்பதற்காக, சில பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். இந்நிலையில், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருந்தியல் மற்றும் நோயியல் பேராசிரியர் எலீனர் பிம்லா ஸ்வர்ஸ் தலைமையிலான குழுவினர் சர்க்கரை நோய்க்கான காரணம் குறித்து பெண்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 40 முதல் 78 வயதுக்குட்பட்ட 2,233 பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆய்வில் பங்கேற்ற 56 சதவீத தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாய்ப்பால் கொடுத்ததாக தெரிவித்தனர். 27 சதவீதம் பேர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். மற்றவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள். இவர்களையும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு 2ம் வகை சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதாவது தாய்ப்பால் கொடுத்த மற்றும் குழந்தை இல்லாதவர்களைவிட பால் கொடுக்காதவர்களுக்கு சர்க்கரை நோய் வர 2 மடங்கு அதிக வாய்ப்பு இருந்தது.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது தெரியவந்தது. வயது, உடல் இயக்கம், புகை மற்றும் மது பழக்கத்தைப் பொறுத்து இது வேறுபட வாய்ப்பு உள்ளது.
ÔÔ2ம் வகை சர்க்கரை நோய் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. இதுதவிர, பெண்களைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இந்த நோயை தவிர்க்கலாம். இந்த ஆய்வின் மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படும்ÕÕ என பேராசிரியர் எலீனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment