இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தோனேசிய மக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏக் மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிச்டர் அளவு கோளில் 7.3 ரிச்டர் பதிவான இந்த கடுமையான நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஏக் மாகாண பகுதியில் கடலுக்கு அடியில் சுமார் 30 கி.மீ ஆழத்தில் இந்த கடும் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மிக அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பியதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தோனேசிய மக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment