பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய T.சுப்ரமணியன் பணி ஓய்வுப் பெற்றதையடுத்து பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கடலூர் மாவட்ட காவல் துறையினர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ADSP துறை, சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பரங்கிபேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நூர் முஹம்மது ஆகியோர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியை வாழ்த்திப்பேசினர்.
சற்று தாமதமாக வந்த புவனகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வி ராமஜெயம் T.சுப்ரமணியனுக்கு பொன்னாடைப் போர்த்தி கவுரவித்தார்.
அழைப்பின் பேரில் கலந்துக் கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகாரிக்கு குர்ஆனை அன்பளிப்பாக வழங்கினர். ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
PNOTIMES சார்பாக காவல் துறை அதிகாரியிடம் இரு கேள்விகள்.
பரங்கிப்பேட்டையில் பணியாற்றியுள்ளீர்கள். பணி மற்றும் பரங்கிப்பேட்டை மக்களைப் பற்றி உங்கள் கருத்து… (டைம்ஸ்)
நான் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற ஏரியாக்களில் பணியாற்றியுள்ளேன். பரங்கிப்பேட்டையைப் பொருத்தவரை இங்குள்ள மக்கள் மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கு, அதே போன்று எங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து பணியாற்ற வைத்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒரு ஃபேமிலி மெம்பர்ஸ் போலத்தான் இருந்தோம்.
இப்போது நீங்கள் ஓய்வுப் பெறுகிறீர்கள். இந்த சந்தர்பத்தில் மக்களுக்கு ஏதும் செய்தி சொல்கிறீர்களா…(டைம்ஸ்)
எப்போதும் போல இந்த மக்கள் போட்டி பொறாமையில்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் இன்னும் மூன்று வருடங்கள் பரங்கிப்பேட்டை வந்து செல்வேன். அது இன்னும் இந்த மக்களோடு என் தொடர்பை வலுபடுத்திக் கொள்ள வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment