Islamic Widget

March 14, 2012

ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோர் தொடர்பான ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நாளை (புதன்கிழமை) இறுதி செய்யப்படுகிறது.இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி இ.அகமது, இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் மொசீனா கித்வாய், துணைத்தலைவர் ஏ.அபூபக்கர், சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள இந்திய தூதர் ஹமீது அலி ராவ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும், சவுதி அரேபியா சார்பில் ஹஜ் மந்திரி பந்தர் பின் முகமது பின் ஹம்சா ஆசாத் அல்-ஹஜார் தலைமையிலான குழுவினரும் இறுதி செய்கிறார்கள்.

அப்போது, இந்திய ஹஜ் பயணிகளின் வசதிக்காக மசீர் பகுதியில் மெட்ரோ ரெயில் சேவைக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்திய குழுவினர் வேண்டுகோள் விடுப்பார்கள். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment