Islamic Widget

October 10, 2011

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள்!



குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 2002 ல் கோத்ரா ரயில் அசம்பாவிதத்திற்குப் பிறகு குஜராத் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல்வர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம்; இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்" எனக் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.


இக்கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு ஆதாரமாக கான்ஸ்டபிள் பந்தை வாக்குமூலம் அளிக்க மிரட்டியதாக கூறி, சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

1 comment:

  1. இன்ஷா அல்லா மோடி கூடிய்யவிரைவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்படுவான்.

    ReplyDelete