நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அப்துல் ரசீது பதவி ஏற்றார்.
நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக நேரடி வாக்குப் பதிவில், சுதாகரன் ஏற்கெனவே தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி ஏற்று உள்ளார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அ.தி.மு.க. 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 12 வார்டுகளையும், தி.மு.க. 3 வார்டுகளையும், பா.ம.க. 2 வார்டுகளையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 வார்டுகளையும்
கைப்பற்றின. சனிக்கிழமை துணைத் தலைவர் தேர்தல்
நடந்தது.
இதில் அ.தி.முக. சார்பில் அப்துல் ரசீதும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகவேலும் போட்டியிட்டனர்.
இதில் அப்துல் ரசீது, நகராட்சித் தலைவர் வாக்கு உள்ளிட்ட 23 வாக்குகளும், முருகவேல் 7 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை உறுப்பினர் பார்த்தசாரதி வாக்கெடுப்புக்கு வரவில்லை.
இறுதியாக அப்துல் ரசீது துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றார்.

No comments:
Post a Comment