பரங்கிப்பேட்டை: கடந்த 5 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது இன்நிலையில் குறிப்பாக கடற்கரை பகுதியான பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம் பகுதியில் அதிகளவில் மழை பெய்து வருகிறது நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக பரங்கிப்பேட்டையில் 75 மி.மீ., அளவு மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் மழை அளவு:
கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு, மில்லி மீட்டரில் வருமாறு:
பரங்கிப்பேட்டை 75, கடலூர் 53, காட்டுமன்னார்கோயில் 36, ஸ்ரீமுஷ்ணம் 22, அண்ணாமலை நகர் 21.4, கொத்தவாச்சேரி 21, காட்டுமயிலூர் 18, குப்பநத்தம் 17.2, வேப்பூர் 15, லால்பேட்டை 14, விருத்தாசலம் 12.2, பெலாந்துரை 12, சிதம்பரம் 10, கீழ்ச்செறுவாய், சேத்தியாத்தோப்பு, புவனகிரி தலா 6, மேமாத்தூர் 5, பண்ருட்டி 4.8, தொழுதூர் 4.2.
No comments:
Post a Comment