தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும்விதமாக, நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இதனால் தமிழகத்தில் நேற்று மதியம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன.
பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் மக்கள், திடீர் மழையால் பாதிக்கப்பட்டனர்.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆந்திரா கடலோரப்பகுதியில் இருந்து இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் மழை பெய்யும்.
பரங்கிப்பேட்டையில் நேற்று முன் தினம் முதல் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அனைத்து சாலைகள், தெருக்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment