Islamic Widget

August 13, 2011

நதிநீர் குத்தகை ஹிந்துத்துவா ஊழல்!

பத்ரா நதி நீர் திட்ட குத்தகையில் நடந்துள்ள ஊழல்கள் தொடர்பாக, ஹிந்துத்துவா பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, லோக் ஆயுக்தா போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

பத்ரா நதிநீர் குத்தகை திட்டத்தை நடைமுறைப்படுத்த, 13 கோடி ரூபாயை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்வரும் ஆன எடியூரப்பா முறைகேடாக பெற்றுள்ளார். இந்த பணத்தை, முருடேஸ்வரா கார்ப்பரேஷன் வாயிலாக, தன் மகனுக்கு சொந்தமான தவளகிரி, சஹியாத்ரி ஹெல்த் கேர் நிறுவனங்களுக்கு எடியூரப்பா வழங்கியுள்ளார்.இதையடுத்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம், கடந்த 8ம் தேதியன்று எடியூரப்பா மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தா போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு பின்னர், லோக் ஆயுக்தா போலீசார், சி.ஆர்.சி.பி., 1561 பி' சட்டத்தின் கீழ், எடியூரப்பா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். இதனால், எந்த நேரத்திலும் கூடுதல் விசாரணைக்காக, எடியூரப்பாவை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment