சென்னை : ""சென்னையில் மட்டும் அமலில் உள்ள, 24 மணி நேர தானியங்கி மின்கட்டண இயந்திர திட்டம், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்,'' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், மின்துறை மானிய கோரிக்கை மீது, மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தார். அப்போது வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
1,365 கோடி ரூபாய் செலவில், 55 புதிய துணை மின் நிலையங்கள்.
2,500 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிதாக மிக உயரழுத்த மின்பாதைகள்.
தொழில்நுட்பம் மற்றும் வணிக இழப்புகளை குறைக்க, ஊரக மின்னூட்டிகள் பிரிப்பு. விழுப்புரம் மண்டலத்தில், 100 மின்னூட்டிகளில், 300 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவில், தானியங்கி மின் அளவிகள்.
கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு, இரண்டு மின்பகிர்மான வட்டங்கள்.
மின்கட்டணம் செலுத்த, தானியங்கி ஆன்-லைன் இயந்திர திட்டம், பின் மற்ற மண்டலங்களுக்கும் விரிவு.
புதிதாக 600 உதவி செயற்பொறியாளர்கள் அமர்த்தப்படுவர். பகுதி நேர துப்புரவு பணியாளர்கள், 5,516 பேரின் பணி, காலநிலை ஊதியத்துடன் நிரந்தரப்படுத்தப்படும்.
தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், 41.85 லட்சம் செலவில், ஐந்து கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
பொதுக்குடிநீர் வினியோகத்திற்கு 16.34 லட்சம் செலவில், சூரிய ஒளி மூலம் இயங்கும் நீர் இறைப்பான்கள், இரண்டு தொலைதூர கிராமங்களில் அமைக்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக, இந்திய கிராம தொழில்நுட்ப அறிவியல் மையத்துடன் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.
அடுக்குமாடிகள், வணிகவளாகங்களில், லிப்டுகள் அமைக்க, இணைய தளம் மூலம் மின் ஆய்வுத்துறையில், சான்றிதழ் வழங்க, 30.48 லட்சம் செலவில் புதிய வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.

No comments:
Post a Comment