சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள் சம பலத்துடன் தேர்தல் பணியாற்றி வரும் நிலையில் பா.ஜ.,வேட்பாளரால் பாதிப்பு வந்து விடுமோ என இரு அணி வேட்பாளர்களுமே அச்சத்தில் உள்ளனர்.
சிதம்பரம் சட்டசபை தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. பதட்டமான தொகுதியும் கூட. இங்கு தி.மு.க., - பா.ம.க., - வி.சி., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலத்துடன் மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையாரும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் பலத்துடன் மா.கம்யூ., வேட்பாளர் பாலகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இரு அணிகளுமே வெற்றி இலக்குடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க., கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் பன்னீர்செல்வம், கனிமொழி, நடிகர் நெப்போலியன், வன்னியர் சங்க தலைவர் குரு, வி.சி., திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., கூட்டணியும் சிதம்பரம் தொகுதி வெற்றியை கவுரவ பிரச்னையாக எடுத்துக்கொண்டு பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இரு அணி முக்கிய தலைவர்கள் வெற்றியை குறிவைத்து பம்பரமாக சுழல்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களர்களுக்கு சவாலாக பா.ஜ., வேட்பாளர் கண்ணன் நடுநிலையாளர்கள், அவர் சார்ந்த சமுதாயத்தினர் மற்றும் தீட்சதர்களின் ஓட்டுகளை கணிசமாக பெறும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். கணிசமான ஓட்டுகள் அவருக்கு கிடைக்கும் சூழல் உள்ளது. அதனால் அவர் யாருடைய ஓட்டுகளுக்கு வேட்டு வைக்க போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. பா.ஜ., வேட்பாளர் நமக்கு ஒரு போட்டியாக இருக்காது என நினைத்த தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், அவரால் நமக்கு பாதிப்பு வந்துவிடுமோ என கலக்கமடைந்துள்ளனர்.

ஒரு மயிர் இல்லே பா.ஜ.க-க்கு சிதம்பரம் தொகுதியிலே டிபாசிட் கூட வாங்காது!!!
ReplyDeleteதினமலர் ஒரு பார்பான் பத்திரிக்கை அவன் இப்படிதான் நியூஸ் போடுவான்...
அதையும் நீங்கள் கட் காஃபி பேஸ்ட் செய்றிக்கே நீங்கள்????
பி.ஜே.பி பற்றி செய்தி போடுவதை நிறுத்திகொள்ளுங்கள்...