தமிழகத்தில் நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 9.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்த நிலையில் 10ஆம் வகுப்பு மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. 10ஆம் வகுப்பு தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் 10ஆம் வகுப்பு தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 9.5 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் மாணவ - மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை: 28ஆம் தேதி - தமிழ் முதல் தாள், 29ஆம் தேதி - தமிழ் 2ஆம் தாள், 31ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1ஆம் தேதி - ஆங்கிலம் 2ஆம் தாள், 5ஆம் தேதி - கணிதம், 8ஆம் தேதி - அறிவியல், 11ஆம் தேதி - சமூக அறிவியல் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை: 28ஆம் தேதி - தமிழ், 29ஆம் தேதி - மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி), 31ஆம் தேதி - ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1ஆம் தேதி - ஆங்கிலம் 2ஆம் தாள், 2ஆம் தேதி - மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி), 5ஆம் தேதி - கணிதம், 8ஆம் தேதி - அறிவியல், 9ஆம் தேதி - சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி), 11ஆம் தேதி - சமூக அறிவியல்.

No comments:
Post a Comment