தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு, வேட்பளார் அறிவிப்பு முதலியவை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.மார்ச் 19ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. வெள்ளிக் கிழமை வரை தமிழகம் முழுவதும் சுமார் 2401 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வெள்ளிக் கிழமை மட்டும் 892 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.சென்னை மாவட்டத்தில் 68 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.28ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (30ஆம் தேதி) மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்

No comments:
Post a Comment