முதுநகர் : கடலூர் சிப்காட்டில் சீல் வைக்கப்பட்ட தனியார் கம்பெனி மீண்டும் இயங்குவதாக கூறி கிராம மக்கள் கம்பெனியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் சிப்காட்டில் கடந்த 6ம் தேதி இரவு சாஷன் கம்பெனியில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் 100க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கம்பெனி அஜாக்கிரதையாகவும், போதிய பாதுகாப்பின்றி செயல்பட்டதை தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின்படி கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கம்பெனி மீண்டும் தொடர்ந்து இயங்குவதாக கூறி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கம்பெனியை முற்றுகையிட்டு கண்ணாடியை உடைத்தனர். தகவலறிந்த முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சீல் வைக்கப்பட்ட நிலையில் அனுமதியில்லாமல் கம்பெனி செயல்பட முடியாது என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். கம்பெனியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
source: dinamalar
source: dinamalar
No comments:
Post a Comment