மொகாலி : மொகாலி: மொகாலியில் நடந்த பரபரப்பான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி, அசத்தலாக பைனலில் நுழைந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் நெஹ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாக்., தரப்பில் சோயப் அக்தர் இன்றைய போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.
சேவாக் 38 ரன்களுக்கும் ,காம்பீர் 27 ரன்களுக்கும், விராத் கோக்லி 9 ரன்களுக்கும், யுவராஜ் சிங் ரன் எதுவும் எடுக்காமலும், தோனி 25 ரன்களும், ஹர்பஜன் சிங் 12 ரன்களுக்கும், ஜாகிர் கான் 9 ரன்களுக்கும் நெஹ்ரா ஒரு ரன்னுக்கும் அவுட்டாயினர். ரெய்னா 36 ரன்களுடன் இறுதி வரைகளத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வாகாப் ரியாஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.சச்சின் அரைசதம் : சச்சின் டெண்டுல்கர் இன்றைய போட்டியில் 100 வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படட்ட நிலையில் சச்சின் 85 ரன்களுக்கு அப்ரிதி பந்தில் ஆட்டமிழந்தார். இது அவர் அடித்துள்ள 95-வது அரை சதமாகும். உலகக் கோப்பை தொடரில் சச்சினின் 15து அரை சதமாகும். அவுட் ஆவதில் இருந்து 4 முறை அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment