கடலூர் : அ.தி.மு.க., கூட்டணியில் நிலவிய குழப்பத்தினால் சோர்வடைந்திருந்த அ.தி.மு.க.,வினர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுறுசுறுப்படைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி. மு.க., சம பலத்தில் உள் ளன.
கடந்த தேர்தலில் கூட தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தலா நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றன. விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மாவட்டத்தில் கூடுதல் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என இரு கட்சியினரும் கடந்த 6 மாதங்களாக கிளைக் கூட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் 100 வாக்காளர்களுக்கு மூன்று பொறுப்பாளர்களை நியமித்து திண்ணை பிரசாரம் செய்து வந்தனர். கடந்த 1ம் தேதி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதும், இருகட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கினர். அ.தி.மு.க., தலைமையில் ம.தி.மு.க., - தே.மு. தி.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வலுவான கூட்டணி அமைத்ததால் இம்மாவட்ட அ.தி. மு.க.,வினர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். விளம்பரம் செய்ய கிராமங்களில் சுவர்களில் இடம் பிடித்தனர். கடந்த 16ம் தேதி அ.தி. மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதும் பல இடங்களில் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் தொகுதி ஒதுக்கீட்டில் ம.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியயேற்றப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையால் அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர். கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவித்த போதிலும் தேர்தல் பணியை துவங்காமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் திருத்தம் செய்து 22ம் தேதி வெளியிடப்படும் எனக் கூறியதால் நிர்வாகிகள் அனைவரும் சோர்வடைந்தனர். ஒருவழியாக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்து நேற்று முன்தினம் கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கடலூரில் முன்னாள் அமைச்சர் சம்பத், குறிஞ்சிப்பாடியில் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலியில் சிவசுப்ரமணியன், புவனகிரியில் செல்வி ராமஜெயம், காட்டுமன்னார்கோவிலில் முருகுமாறனும், கூட்டணியான தே.மு.தி.க., சார்பில் பண்ருட்டியில் சிவக்கொழுந்து, விருத்தாசலத்தில் முத்துகுமார், திட்டக்குடி (தனி) தமிழ் அழகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். எஞ்சிய சிதம்பரம் தொகுதி மா.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டள்ளது. கடந்த 6 நாட்களாக சோர்வடைந்திருந்த அ.தி.மு.க.,வினர் கூட்டணியில் நிலவிய குழப்பங்கள் தீர்ந்து நேற்று முன்தினம் வேட்டபாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் மீண்டும் சுறுசுறுப்படைந்து தேர்தல் பணியை துவங்கியுள்ளனர். சென்னையிலிருந்து வந்த வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து அங்கேயே தேர்தல் பிரசாரத்தை துவங்கினர். கூட்டணி குழப்பத்தினால் அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்திருந்ததால் மாவட்டத்தில் தேர்தலுக்கான அறிகுறி இன்றி இருந்த நிலையில், நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்படைந்து தேர்தல் பணியை துவங்கியுள்ளனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment